ம.பி.,யில் 2,625 பேருக்கு கொரோனா; இந்தூரில் மட்டும் 1,486

இந்தூர்: ம.பி.,யில் 2,625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தூரில் மட்டும் 1,486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள போதும், கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 34,149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,120 பேர் பலியாகி உள்ளனர். 8,786 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.


இந்நிலையில், ம.பி.,யில் இன்று(ஏப்.,30) புதிதாக 65 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 2,625 ஆக அதிகரித்தது. புதிதாக 7 பேர் பலியானதால், மொத்த பலி 137 ஆனது. அதிகபட்சமாக இந்தூரில் 1,486 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. போபாலில் 508 பேரும், உஜ்ஜைனில் 138 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.